திங்கள், 8 நவம்பர், 2021

பிட்காயின் என்றால் என்ன. What is bitcoin in tamil.

 பிட்காயின் (Bitcoin) (எண்ணிம நாணயக் குறியீடு: BTC; ฿)

 அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் (open-source software) இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு (அல்லது கட்டச்சங்கிலி - blockchain) என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது. 



பிட்காயினை (பொது வழக்கில் உள்ள டாலர், ரூபாய் போல) வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; மற்றும் சேமித்து வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மைய வங்கியால் (Central Bank) கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. 


ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப் படுவது இல்லை; கட்டுப் படுத்தப்படுவதும் இல்லை. மாறாக, கட்டச்சங்கிலி (blockchain) என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப் பட்டு, பாதுகாக்கப் படுகின்றது. கட்டச்சங்கிலி என்பது ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம். இது இணையர் வலையம் (P2P network) என்ற கணினி வலையத்தில் (computer network) செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும். 


பிட்காயினைக் கண்டு பிடித்தவர் சப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) என்று கூறப்படுகிறது. எனினும் கண்டுபிடித்தவர் உண்மையில் யார் என்று தெரியவில்லை.

அவரால் பிட்காயின் திறந்த மூல மென்பொருளாக 2009-இல் வெளியிடப் பட்டது. 


பிட்காயின், தொடரேடு அல்லது கட்டச்சங்கிலி (blockchain) என்று அழைக்கப் படும் கணினி நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டது. கட்டச்சங்கிலி பல கட்டங்களால் உருவானது. கட்டச்சங்கிலியில் உள்ள கட்டங்களை உருவாக்க சுரங்கமர்கள் (miners) என்பவர்கள் அமர்த்தப் படுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்தை உருவாக்க கூலி கொடுக்க வேண்டும். அந்தக் கூலியைக் கொடுப்பதற்காகவே பிட்காயின் முதன்முதலில் உருவாக்கப் பட்டது. அந்த பிட்காயினை வைத்துக் கொண்டு, டாலர்,ரூபாய், போன்ற பணத்தை வாங்கலாம்; மற்ற பொருட்களையும் வாங்கலாம். 


 பிட்காயின் நாளடைவில் பலராலும் அறியப்பட்ட பிறகு, பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge, இங்கிலாந்து) மேற்கொண்ட ஆய்வின் படி, 2017-இல் 2.9 மில்லியன் முதல் 5.8 மில்லியன் வரையிலான குறியீட்டு நாணயப் பணப்பைகள் (cryptocurrency wallet) பயன்படுத்தப் பட்டன என்றும், அவற்றில் பெரும்பான்மையானவை பிட்காயினைப் பயன்படுத்தியவை என்றும் தெரிய வந்தது. ( குறியீட்டு நாணயம் (cryptocurrency) என்பது குறியாக்கவியல் (Cryptography) முறையைப் பயன்படுத்தி உருவாக்கும் கணினிக் காசுகள் ஆகும்.) 


பிட்காயினால் பல சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பிட்காயினை வைத்து நடத்தப் படும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், பிட்காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது, மற்றும் பிட்காயின் களவுகள் ஆகியன பிட்காயினுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளாகும். மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது.



 இருந்தாலும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் உண்மை. பிட்காயின் பல நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. பிட்காயின் முதலீடு செய்ய இங்கே  சொடுக்கவும் 


பிப்ரவரி 2019-இல் பிட்காயின் எண்ணிக்கை நிலவரம்  


• இப்போது இருக்கும் பிட்காயின்கள்: 17,554,200 


• இனி வெளிவர வேண்டிய பிட்காயின்கள்: 3,445,800 


• பிட்காயின்களின் மொத்த எண்ணிக்கை (17,554,200 + 3,445,800): 21,000,000 


• பிட்காயின் கட்டச்சங்கிலியில், ஒரு கட்டத்தில் இருக்கும் பிட்காயின்கள்: 12.5 


• ஒரு நாளில் உருவாக்கப் படும் கட்டங்கள்: 144 


• ஒரு நாளில் வெளியிடப்படும் பிட்காயின்கள் (144 * 12.5) : 1,800 


• பிட்காயின் கட்டச்சங்கிலியில் ஒரு கட்டம் செய்ய கிடைக்கும் கூலி : 12.5 பிட்காயின்கள் 


• பிட்காயின் மதிப்பு: 


• ฿1 = US$3,815.00 (03 Mar 2019 12:04 am UTC) 


• ฿1 = US$19,650.01 (15 Dec 2017)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக